Monday, February 6, 2017

பைபிள்-அகராதி


தமிழ் பைபிளில் உள்ள சில கடின சொற்களுக்கான விளக்கம்:
🎈 அகத்தியம் (எஸ் 4:8) - கட்டாயம், அவசியம்
🎈 அகரதமான (ஏசா 14:15) - ஆழமான
🎈 அசங்கியம் (எஸ்றா 9:11) - அருவருப்பு, தூய்மையின்மை
🎈 அசம்பி (1 சாமு 21:5) - பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு)
🎈 அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) - ஒரு கொடுமையான ஆயுதம்.
🎈 அஞ்சிக்கை (ஓசி 3:5) - அச்சம், பயம்
🎈 அசூசம் (புலம்பல்) - தீட்டு
🎈 அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) - சடுதியாக, திடீரென வருதல்
🎈 அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) - புடமிடப்பட்ட பொன்
🎈 அழுங்கு (லேவி 11:30) - எறும்பு தின்னும் ஒருவித விலங்கு
🎈 அழிம்பு (எரே 6:7) - கொள்ளையும், சூறையாடுதலும்
🎈 ஆரோகணம் (சங் 120-134) - இசையில் மேலேறும் ஓர் சுருதி
🎈 இதமியம் (நியா 18:20) - மகிழ்ச்சியோடு உடன்படுதல்
🎈 ஈசல் போடுதல்  - விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்)
🎈 இளக்கரிப்பு (ஏசா 42:4) - சோர்ந்து போதல்
🎈 உக்கல் (ஆப 3:16)  - உறுத்துப் போதல்
🎈 உசாவு துணை (யோபு 26:3) - உற்ற துணைவன்
🎈 உம்பிளிக்கை (எஸ்றா 9:12) - மானியமாக கொடுக்கப்பட்ட பொருள்.ஆனால்    இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்) 
🎈 உறுமால் (அப் 19:12) - கைக்குட்டை துணி
🎈 ஒற்தலாம் (மத் 23:23,லூக் 11:42) - ஒரு தானிய வகை. (புதினா)
🎈 கடாட்சம் (உன் 8:10) - அருட்பார்வை, கருணை பெறுதல்
🎈 ஏகோபித்து (நியா 20:1) - ஒருமித்து
🎈 கட்டியக்காரன் (தானி 3:4) - அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்
🎈 கலாதி (எஸ்றா 4:15) - கலகம், சண்டை, புரட்சி 
🎈 கலிக்கம் (வெளி 3:18) - கண்ணிலிடும் மருந்து
🎈 கிரியிருப்பவர்கள் (2 இராஜா 14:14) - பிணைக் கைதிகள்
🎈 கறளை (எரே 48:6) - பிரயோஜனமில்லாத
🎈 காங்கை (ஏசா 25:5) - வெப்பம்
🎈 காய்மகாரம் (1சாமு 18:9) - பொறாமை
🎈 கிரியாப்பிரமாணம் (ரோம 3:27) - செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்.
🎈 கிரித்தியங்கள் (நியா 2:19) - தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்
🎈 குருக்கு (ஆதி 3:18) - நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்)
🎈 குங்கிலியம் (யாத் 30:34) - ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது)
🎈 குலாரி வண்டில் (ஏசா 66:20) - மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு
🎈 கொறுக்கை (ஏசா 19:6) - கோரைப்புல் / நாணல்
🎈 கொடி மாசி (யோபு 38:37) - நிலையற்று அலையும் மேகங்கள்
🎈 கும்பு (எசே 7:14) - ஜனக்கூட்டம்
🎈 கொம்மை (நெகே 3:1,11) - இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்.
🎈 கோரி (யோபு 21:32) - கல்லறை, சமாதி
🎈 சாமாசி பண்ணும் தூதன் (யோபு 33:23) - மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்
🎈 சம்பாரம் (எசே 24:10) - உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்.
🎈 சலக்கரணை (2 இராஜா 4:13) - கரிசணையோடு
🎈 சளுக்கு (எரே 5:28) - நயமாக பேசுதல்
🎈 சன்னது (எஸ்றா 7:11) - ஆவணம், கடிதம், அரசாணை
🎈 சர்ப்பனை (அப் 25:3) - வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி 
🎈 சன்னதக்காரன் (உபா 18:11) - பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்
🎈 சுயம்பாகி (ஆதி 40:1) - சமையற்காரன்
🎈 சீதளம் (ஆதி 8:22) - பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்
🎈 சிரேஷ்டம் (நாகூம் 3:8) - தலை சிறந்தது.
🎈 சொகுசா (எசே 1:4,8:2) - துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்.
🎈 சுணை (எரே 51:27) - கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு.
🎈 தகசுத்தோல் (யாத் 25:5,26:14) - கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு)
🎈 தஸ்திர அறை (எஸ் 6:1) - பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை
🎈 தர்ப்பணம் (யாத் 38:8) - கண்ணாடி (வெண்கல கண்ணாடி)
🎈 தாக்கீது (தானி 6:7,8,12) - ஆணை


Sunday, February 5, 2017

பேசக்கூடாத

வாயும்.. வார்த்தைகளும்.. ஜாக்கிரதை! ஜாக்கிரதை!!

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 12:36)

 பேசும் வார்த்தைகள் கூட கிறிஸ்து இயேசுவுக்கு ஏற்றதாய் இருக்கவேண்டும்.

பரிசுத்த வேதம் வகையறுக்கும் "பேசக்கூடாத பேச்சுகள்" எவை எவை?

1. பெருமையான வார்த்தைகளை பேசக்கூடாது
- யாக் 3:5

2. மேட்டிமையான வார்த்தைகளை பேசக்கூடாது
- 1 சாமு 2:3

3. அகந்தையான வார்த்தைகளை பேசக்கூடாது
- 1 சாமு 2:3

4. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 75:4

5. அதிகமான வார்த்தைகளை பேசக்கூடாது
- மத் 5:37

6. கிழவிகளின் கட்டுக்கதைகளை பேசக்கூடாது
- 1 தீமோ 4:7

7. வீணான பேச்சுகளை பேசக்கூடாது
- மத் 12:36

8. கடுஞ் சொற்களான வார்த்தைகளை பேசக்கூடாது
- நீதி 15:1

9. நம்மை நாமே புகழ்ந்து பேசக்கூடாது
- நீதி 27:2

10. நாம் செய்த காரியங்களை நாமே புகழ்ந்து பேசக்கூடாது
- நீதி 20:6

11. தீமையை பேசக் கூடாது
- யோபு 27:3

12. துர்ச் செய்தியை பேசக்கூடாது
- எண் 13:33

13. வம்பு வார்த்தைகளை பேசக்கூடாது
- எபேசி 5:4

14. புத்தியீனமானவைகளை பேசக்கூடாது
- எபேசி 5:4

15. யாரையும் பரியாசம் பன்னி பேசக்கூடாது
- எபேசி 5:4

16. யாரையும் சபித்தல் கூடாது
- யாக் 3:10

17. மற்றவர்கள் மனதை புண்படுத்தும் வார்த்தைகளை பேசக்கூடாது
- நீதி 12:18

18. இறுமாப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
- யூதா:16

19. கோள் செல்லுதல் கூடாது
- லேவி 19:16

20. நாவினால் புறங்கூறுதல் கூடாது
- சங் 15:3

21. பிரயோஜனமில்லாத வார்த்தைகளை பேசக்கூடாது
- யோபு 15:3

22. தர்க்கத்தை உண்டு பண்ணும் வார்த்தைகளை பேசக்கூடாது
- யோபு 15

23. ஒய்வு நாளில் சொந்த பேச்சை பேசக்கூடாது
- ஏசா 58:13

24. கபடான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 120:2, 3

25. கடினமான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 94:4

26. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 64:4

27. தகாத காரியங்களை பேசக்கூடாது
- 1 தீமோ 5:13

28. மற்றவர்களை குற்றவாளியாக தீர்த்து பேசக்கூடாது
- ரோ 2:1

29. இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது
- 1 தெச 2:5

30. பதற்றமுள்ள வார்த்தைகளை பேசக்கூடாது
- நீதி 29:20

31. தந்திரமான வார்த்தைகளை பேசக்கூடாது
- 2 பேது 2:3

32. விரோதமான பேச்சுகளை பேசக்கூடாது
- 3 யோ :10

33. மாயையைக் குறித்து பேசக்கூடாது
- சங் 144:8

34. ஆகாத சம்பாஷணைகள் கூடாது
- 1 கொரி 15:33

35. பொய்யான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 63:11

36. கசப்பான வார்த்தைகளை பேசக்கூடாது
- சங் 54:4

அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்?

கர்த்தர் செய்த அதியசங்களை யெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.
- 1 நாளாகமம் 16:9

பிறனோடே உண்மையைப் பேசுங்கள்;
- சகரியா 8:16

பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்.
- எபேசியர் 4:29

உங்கள் வாய்க்கும் வார்தைகளுக்கும் கிறிஸ்து இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்!


Saturday, January 21, 2017

FAITH

Different Kinds of Faith

1. Great Faith - Matt. 8:10-28
2. Weak Faith - Rom. 14:1
3. Little Faith - Luke 12:28
4. Saving Faith - Eph. 2:8
5. Healing Faith - Mark 10:52
6. Dead Faith - James 2:17, 26
7. Strong Faith - Rom. 4:20-21
8. Rich Faith - James 2:5
9. Mustard Seed Faith - Matt. 17:20
10. Overcoming Faith - 1 John 5:4
11. Growing Faith - 2 Thess. 1:3
12. Creative Faith - Heb. 11:3
13. Praying Faith - James 5:14-15
14. Tried Faith - 1 Peter 1:7
15. Measure of Faith - Rom. 12:3
16. Justifying Faith - Rom. 5:1
17. Perfect Faith - James 2:22
18. Word of Faith - Rom. 10:8
19. Purifying Faith - Acts 15:8-9
20. Sanctifying Faith - Acts 26:18
21. Spirit of Faith - 2 Cor. 4:13
22. Walk of Faith - 2 Cor. 5:7
23. Shield of Faith - Eph. 6:16
24. Breastplate of Faith - 1 Thess. 5:8
25. Unity of Faith - Eph. 4:13
26. Steadfast Faith - Col. 2:5
27. Gift of Faith - 1 Cor. 12:9
28. Unfeigned Faith - 2 Tim. 1:5
29. No Faith - Matt. 4:40
30. Visible Faith - Matt. 9:2
31. Unfailing Faith - Luke 22:32
32. Full of Faith - Acts 6:5
33. Door of Faith - Acts 14:27
34. Faith that is spoken about - Rom. 1:8
35. Mutual Faith - Rom. 1:12
36. Faith to Faith - Rom. 1:17
37. Living by Faith - Rom. 1:17
38. Law of Faith - Rom. 3:27
39. Faith that gives one access - Rom. 5:2
40. Speaking Faith - Rom. 10:6
41. Standing Faith - Rom. 11:20
42. House of Faith - Gal. 6:10
43. One Faith - Eph. 4:5
44. Grounded Faith - Col. 1:23
45. Work of Faith - 1 Thess. 1:3
46. First Faith - 1. Tim. 5:12
47. Fight of Faith - 2 Tim. 1:5
48. Keeping Faith - 2 Tim. 4:7
49. Common Faith - Titus 1:4
50. Sound Faith - Titus 2:2
51. Effectual Faith - Phil. 1:6
52. Rich Faith - James 2:12
53. Precious Faith - 2 Peter 1:1
54. Holy Faith - Jude 20


Monday, January 16, 2017

ஆபேலா? காயீனா?

உன் பிள்ளை ஆபேலா? காயீனா?
நீ வளர்க்கும் பிள்ளை காயீனா? அல்லது ஆபேலா? ஓர் உயர்தரமான மகன் அல்லது மகள் தற்செயலாக உருவாவதில்லை. அப்படிபட்டப் பிள்ளையின் பின்னால் மறைந்திருப்பது பெற்றோரின் கரிசனை, அக்கறை, முயற்சி, ஜெபம்.

காயீனை உருவாக்குவது எப்படி?

1.  பிள்ளை கேட்பதை எல்லாம் கொடு.
2.  கெட்ட வார்த்தைகைப் பேசும்போதுச் சிரித்து மகிழ்.
3.  ஆவிக்குரிய பயிற்சி அளிக்காதே. 21 வயதில் அவனே தெரிந்துகொள்ளட்டும்.
4.  தவறு செய்யும்போது அதைச் சுட்டிக்காட்டாதே.
5.  அவனுடைய வேலைகளையெல்லாம் நீயே செய்.
6.  அவன் எதையும் வாசிக்கவிடு. (கணிப்பொறியில் எதையும் பார்க்கட்டும்!)
7.  பிள்ளைகளுக்குமுன் கணவனுடன் சண்டை போடு.
8.  பணம் கேட்கும்போதெல்லாம் கொடு.
9.  அவனுக்கு எதையும் மறுக்காதே.
10.மற்றவர் குறை கூறும்போது மகனுக்கு இசைந்து பேசு.
11.அவன் சச்சரவில் மாட்டிக்கொள்ளும்போது, அவன்மேல் எனக்கு எந்த    அதிகாரமுமில்லை எனக் கையை விரித்துவிடு.
12.கண்ணீரின் வாழ்க்கைக்கு உன்னை ஆயத்தப்படுத்திக்கொள்.

ஆபேலை உருவாக்குவது எப்படி?
1.  கிறிஸ்தவ வாழ்க்கையைக் கற்றுக்கொடு-நீதிமொழிகள் 22:6.
2.  தேவையானபோது தண்டனை கொடு-நீதிமொழிகள் 22:15.
3.  முன்மாதிரியாக வாழ்ந்துக்காட்டு-2 தீமோத்தேயு 1:5.
4.  நாள்தோறும் பைபிள் வாசிக்கக் கற்றுக்கொடு-சங்கீதம் 119:9.
5.  ஜெபிக்கக் கற்றுக்கொடு-மத்தேயு 18:20.
6.  தன் கைகளால் வேலை செய்யக் கற்றுக்கொடு-புலம்பல் 3:27.
7.  ஆவிக்குரியவைகளுக்கு முதலிடம் கொடுக்கச் சொல்-1 தீமோத்தேயு 4:8.
8.  பெரியோர்களை மதிக்கக் கற்றுக்கொடு- 1 பேதுரு 5:5.
9.  தாய்மையின் மேன்மையை உணர்த்து-1 தீமோத்தேயு 5:25.
10.சபை வழிபாட்டுக்கும், ஆவிக்குரிய கூட்டங்களுக்கும் ஒழுங்காகச் செல்வதில் முன்மாதிரியாக இரு-எபிரெயர் 10:25.
11.நாட்டின் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கற்றுக்கொடு-ரோமர் 13:1.
12.நன்னடத்தை நற்பயனைத் தரும் என்பதை விளக்கிச் சொல்-ரோமர் 12:17.

Sunday, December 18, 2016

பதிவிறக்கம்

வேதாகமம் [Tamil Holy Bible] [Sample] download
Bibla e Shenjtë [Albanian Holy Bible] [Sample] download
መጽሐፍ ቅዱስ [Amharic Holy Bible] [Sample] download
رض المقدسة [Arabic Holy Bible] [Sample] download
পবিত্র বাইবেল [Bengali Holy Bible] [Sample] download
БЪЛГАРСКА БИБЛИЯ [Bulgarian Holy Bible] [Sample] download
聖經 [Chinese - Traditional Characters - CUV] [Sample] download
[Chinese Mandarin Holy Bible - CUV] [Sample] download
Sheng Jing [Chinese Pinyin Bible] [Sample] download
BIBLIJA [Croatian Holy Bible] [Sample] download
česko Bible [Czech Holy Bible] [Sample] download
Bibelen [Danish Bible] [Sample] download
De Bijbel [Dutch Bible] [Sample] download
The Holy Bible [English Holy Bible - KJV] [Sample] download
کتاب مقدس [Farsi (Persian) Holy Bible] [Sample] download
Raamattu [Finnish Holy Bible] [Sample] download
La Bible [French Holy Bible - Louis Segond] [Sample] download
Die Bibel [German Holy Bible - Luther] [Sample] download
Βίβλος [OLD Greek Holy Bible] [Sample] download
Βίβλος [Modern Greek Holy Bible] [Sample] download
પવિત્ર બાઇબલ [Gujarati Holy Bible] [Sample] download
הקודש במקרא [Hebrew Holy Bible] [Sample] download
पवित्र बाइबिल [Hindi Bible] [Sample] download
Pavitra Baaibil [Hindi Romanized] [Sample] download
Biblia [Hungarian Holy Bible] [Sample] download
Alkitab [Indonesian Bible] [Sample] download
Biblían [Icelandic Holy Bible] [Sample] download
La Sacra Bibbia [Italian Holy Bible - Riveduta] [Sample] download
日本聖書 [Japanese Holy Bible - Kougo-yaku] [Sample] download
ಪವಿತ್ರ ಬೈಬಲ್ - [Kannada Holy Bible] [Sample] download
성경 - [Korean Holy Bible] [Sample] download
Baibuli y'Oluganda [Luganda Holy Bible] [Sample] download
സത്യവേദപുസ്തകം [Malayalam Holy Bible] [Sample] download
मराठी बायबल [Marathi Holy Bible] [Sample] download
Bibelen [Norwegian Holy Bible] [Sample] download
ବ୍ୟ ବାଇବଲ - [Oriya Bible] [Sample] download
POLSKIE Biblia [Polish Holy Bible] [Sample] download
A Biblia Sagrada [Portuguese Holy Bible - JFA] [Sample] download
ਬਾਇਬਲ [Punjabi Bible] [Sample] download
Biblia română [Romanian Holy Bible] [Sample] download
Библия [Russian Holy Bible] [Sample] download
Српска Библија [Serbian Holy Bible][Sample] download
Kitaabka Quduuska Ah [Somali Holy Bible] [Sample] download
La Biblia [Spanish Holy Bible - Reina Valera] [Sample] download
Biblia Takatifu [Swahili Bible] [Sample] download
BIBELN [Swedish Holy Bible] [Sample] download
పవిత్ర బైబిల్ [Telugu Holy Bible] [Sample] download
พระคัมภีร์ไบเบิล [Thai Holy Bible] [Sample] download
Bibliya [Tagalog (Filipino) Holy Bible] [Sample] download
வேதாகமம் [Tamil Holy Bible] [Sample] download
Kitap [Turkish Holy Bible] [Sample] download
Біблія [Ukrainian Bible] [Sample] download
انجیل مقدس [Urdu Bible] [Sample] download
Kinh Thánh [Vietnamese Bible] [Sample] download
Latin Vulgate [Vulgata Latina] [Sample] download