தமிழ்
பைபிளில் உள்ள சில கடின சொற்களுக்கான விளக்கம்:
🎈 அகத்தியம் (எஸ் 4:8)
- கட்டாயம், அவசியம்
🎈 அகரதமான (ஏசா 14:15)
- ஆழமான
🎈 அசங்கியம் (எஸ்றா
9:11) - அருவருப்பு, தூய்மையின்மை
🎈 அசம்பி (1 சாமு 21:5)
- பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு)
🎈 அஸ்திராயுதம் (எரே
50:25,51:20) - ஒரு கொடுமையான ஆயுதம்.
🎈 அஞ்சிக்கை (ஓசி 3:5)
- அச்சம், பயம்
🎈 அசூசம் (புலம்பல்) - தீட்டு
🎈 அசுப்பு (யோபு 9:23, எரோ
4:20) - சடுதியாக, திடீரென வருதல்
🎈 அபரஞ்சி பூஷணம் (நீதி
25:12) - புடமிடப்பட்ட பொன்
🎈 அழுங்கு (லேவி 11:30)
- எறும்பு தின்னும் ஒருவித விலங்கு
🎈 அழிம்பு (எரே 6:7) - கொள்ளையும்,
சூறையாடுதலும்
🎈 ஆரோகணம் (சங்
120-134) - இசையில் மேலேறும் ஓர் சுருதி
🎈 இதமியம் (நியா 18:20)
- மகிழ்ச்சியோடு உடன்படுதல்
🎈 ஈசல் போடுதல் - விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்)
🎈 இளக்கரிப்பு (ஏசா
42:4) - சோர்ந்து போதல்
🎈 உக்கல் (ஆப
3:16) - உறுத்துப் போதல்
🎈 உசாவு துணை (யோபு
26:3) - உற்ற துணைவன்
🎈 உம்பிளிக்கை (எஸ்றா
9:12) - மானியமாக கொடுக்கப்பட்ட பொருள்.ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்)
🎈 உறுமால் (அப் 19:12)
- கைக்குட்டை துணி
🎈 ஒற்தலாம் (மத் 23:23,லூக்
11:42) - ஒரு தானிய வகை. (புதினா)
🎈 கடாட்சம் (உன் 8:10)
- அருட்பார்வை, கருணை பெறுதல்
🎈 ஏகோபித்து (நியா
20:1) - ஒருமித்து
🎈 கட்டியக்காரன் (தானி
3:4) - அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்
🎈 கலாதி (எஸ்றா 4:15) -
கலகம், சண்டை, புரட்சி
🎈 கலிக்கம் (வெளி 3:18)
- கண்ணிலிடும் மருந்து
🎈 கிரியிருப்பவர்கள் (2
இராஜா 14:14) - பிணைக் கைதிகள்
🎈 கறளை (எரே 48:6) - பிரயோஜனமில்லாத
🎈 காங்கை (ஏசா 25:5) - வெப்பம்
🎈 காய்மகாரம் (1சாமு
18:9) - பொறாமை
🎈 கிரியாப்பிரமாணம் (ரோம
3:27) - செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்.
🎈 கிரித்தியங்கள் (நியா
2:19) - தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்
🎈 குருக்கு (ஆதி 3:18)
- நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்)
🎈 குங்கிலியம் (யாத்
30:34) - ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு
வகை இருப்பதாக தெரிகிறது)
🎈 குலாரி வண்டில் (ஏசா
66:20) - மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு
🎈 கொறுக்கை (ஏசா 19:6)
- கோரைப்புல் / நாணல்
🎈 கொடி மாசி (யோபு 38:37)
- நிலையற்று அலையும் மேகங்கள்
🎈 கும்பு (எசே 7:14) - ஜனக்கூட்டம்
🎈 கொம்மை (நெகே 3:1,11)
- இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும்
காவல் மாடங்கள் என பொருள்படும்.
🎈 கோரி (யோபு 21:32) - கல்லறை,
சமாதி
🎈 சாமாசி பண்ணும் தூதன்
(யோபு 33:23) - மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்
🎈 சம்பாரம் (எசே 24:10)
- உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்.
🎈 சலக்கரணை (2 இராஜா
4:13) - கரிசணையோடு
🎈 சளுக்கு (எரே 5:28) -
நயமாக பேசுதல்
🎈 சன்னது (எஸ்றா 7:11)
- ஆவணம், கடிதம், அரசாணை
🎈 சர்ப்பனை (அப் 25:3)
- வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி
🎈 சன்னதக்காரன் (உபா
18:11) - பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்
🎈 சுயம்பாகி (ஆதி 40:1)
- சமையற்காரன்
🎈 சீதளம் (ஆதி 8:22) - பல
அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்
🎈 சிரேஷ்டம் (நாகூம்
3:8) - தலை சிறந்தது.
🎈 சொகுசா (எசே 1:4,8:2)
- துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்.
🎈 சுணை (எரே 51:27) - கூர்மையான
முட்கள் போன்ற கொடுக்கு.
🎈 தகசுத்தோல் (யாத்
25:5,26:14) - கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு)
🎈 தஸ்திர அறை (எஸ் 6:1)
- பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை
🎈 தர்ப்பணம் (யாத்
38:8) - கண்ணாடி (வெண்கல கண்ணாடி)
🎈 தாக்கீது (தானி
6:7,8,12) - ஆணை
No comments:
Post a Comment