Wednesday, June 15, 2016

பைபிள் விடுகதை,



விடுகதை 

அகந்தையான வார்த்தை
அதிகமான வார்த்தை
ஆகாத வார்த்தை
இச்சையான வார்த்தை
வீணான வார்த்தை
தீமையானா வார்த்தை
புத்தியீன வார்த்தை
பரியாச வார்த்தை
புண்படுத்தும் வார்த்தை
பொய்யான வார்த்தை
பெருமையான வார்த்தை
மேட்டிமையான வார்த்தை
சபிக்கும் வார்த்தை
இறுமாப்பான வார்த்தை
புறங்கூறும் வார்த்தை
கபடான வார்த்தை
கசப்பான வார்த்தை
தகாத வார்த்தை
தந்திரமான வார்த்தை
விரோதமான வார்த்தை
மாயையான வார்த்தை 
கர்த்தர் செய்த அதியசங்களை யெல்லாம் தியானித்துப் பேசுங்கள். - 1 நாளாகமம் 16:9
பிறனோடே உண்மையைப் பேசுங்கள்; - சகரியா 8:16
கேள்வி அப்படியானால் எதைத்தான் பேசவேண்டும்  ????

விடை  பக்திவிருத்திக்கு ஏதுவான நல்லவார்த்தைகள் உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள். - எபேசியர் 4:29
**********************************************

இடைவிடா ஜெபம்
விழித்திருந்து ஜெபம்
ஊக்கமான  ஜெபம்
ஒருமணப்பட்ட ஜெபம்
கேள்வி சோர்ந்து போகாமல் ஜெபம் பண்ணுங்கள் என்று சொன்னவர் யார் ??
விடை இயேசு லூக்கா 18:1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்
**************************************************
ஈசாக்கு மனைவிக்காக ஜெபித்தான்
மோசே சகோதரிக்காக ஜெபித்தான்
யோபு சிநேகிதருக்காக ஜெபித்தான்
கேள்வி தன வேலைக்காரனுக்காக ஜெபித்தவன் யார் ??
விடை எலிசா , 2 RAJA 6-17 லூக்கா 7 1-10

******************************************************* 
தொட்டதும் சொஸ்தமானால் பெரும்பாடு ஸ்திரி
தொட்டபின் விசுவாசிப்பான் தோமா
தொட்டது யார் என்று கெட்டவரே
தொடாதே என்று ஏன் உரைத்தார்
விடை யோவான் 20:17 இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை;
***************************************

அம்மா சட்டை போட்டால்
அண்ணன் தம்பி கிழித்து  போட்டான்
அரண் மனையில் சட்டை போட்டால் 
ராஜஸ்திரி உறுவிக்கொண்டாள்
ராஜா உடை உடுத்த
உதறி விட்டு வந்து விட்டான்
கேள்வி அவன் யார் ??
விடை மோசே 
************************************************ 

விருந்துக்கு வந்தவன் செத்து போனான்
செத்து போனவன் விருந்துக்கு வந்தான்
கேள்வி யார் ?????
விடை ஆமோன், லாசரு யோவான் 12:2 அங்கே அவருக்கு இராவிருந்து பண்ணினார்கள்; மார்த்தாள் பணிவிடை செய்தாள்; லாசருவும் அவருடனே கூடப்பந்தியிருந்தவர்களில் ஒருவனாயிருந்தான்.
***************************************** 
ஆதாம் கீழ் படியாமல் மறித்தான்
இவனோ மரித்தபின் கீழ் படிந்தான்
விடை யோவான் 11:45 அப்பொழுது மரியாளிடத்தில் வந்திருந்து, இயேசு செய்தவைகளைக் கண்டவர்களாகிய யூதர்களில் அநேகர் அவரிடத்தில் விசுவாசமுள்ளவர்களானார்கள்.

***********************************************  
அன்பு தன்னைப் புகழாது,
அன்பு இறுமாப்பாயிராது,
அன்பு மாயமற்றதாம்
அன்பு புரன்கூராதாம்
அன்பு பொல்லாங்குசெய்யாது
அன்பு ஒரு மன மகிழ்சி
அன்பு திரளான பாவங்களை மூடும்
அன்பு நித்திய ஆறுதல் அளிக்கும்
அன்பு ஆவியின் கனியிலேமுதலில் வருவதாம்
அன்பு நியாய பிரமாணத்தை நிறைவேற்றுகிறது
கேள்வி அன்பு யாரால் உண்டாயிருக்கிறது ????
விடை   I யோவான் 4:10 நாம் தேவனிடத்தில் அன்புகூர்ந்ததினால் அல்ல, அவர் நம்மிடத்தில் அன்புகூர்ந்து, நம்முடைய பாவங்களை நிவிர்த்திசெய்கிற கிருபாதாரபலியாகத் தம்முடைய குமாரனை அனுப்பினதினாலே அன்பு உண்டாயிருக்கிறது. XXXX 13-11-2015

**************************************
விடுகதை
பத்துல ஒன்னு பெயிலான எல்லாம் பெயிலு
ஆனா இங்கே ஒண்ணுல பாசானா எல்லாம் பாசு –MULTI VITAMAIN
விடை யாக்கோபு 2:10 எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.
விடை ரோமர் 13:10 அன்பானது பிறனுக்குப் பொல்லாங்குசெய்யாது; ஆதலால் அன்பு நியாயப்பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. Xxxxxxx 

***************************
விடுகதை
நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து,
சகல இரகசியங்களையும், அறிந்தாலும்
சகல அறிவையும் அறிந்தாலும்,
மலைகளைப் பேர்க்கத்தக்க  விசுவாசமுள்ளவனாயிருந்தாலும்,
இது எனக்கு இல்லாவிட்டால்  நான் ஒன்றுமில்லை
கேள்வி  எது எனக்கு இல்லாவிட்டால்  நான் ஒன்றுமில்லை
விடை I கொரிந்தியர் 13:2 நான் தீர்க்கதரிசன வரத்தை உடையவனாயிருந்து, சகல இரகசியங்களையும், சகல அறிவையும் அறிந்தாலும், மலைகளைப் பேர்க்கத்தக்கதாக சகல விசுவாசமுள்ளவனாயிருந்தாலும், அன்பு எனக்கிராவிட்டால் நான் ஒன்றுமில்லை. XXXXXX

************************
விடுகதை
மோசே  நடுவுல  வைத்தார்
ஏசு நடுவில் இருந்து எடுத்தார்
நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.XXXXXXXXX

லேவியராகமம் 26 : 46. கர்த்தர் தமக்கும் இஸ்ரவேல் சந்ததியாருக்கும் நடுவே இருக்கும்படி மோசேயைக்கொண்டு, சீனாய்மலையின்மேல் கொடுத்த கட்டளைகளும் நியாயங்களும் இவைகளே.
கொலோசெயர் 2:14 நமக்கு எதிரிடையாகவும் கட்டளைகளால் நமக்கு விரோதமாகவும் இருந்த கையெழுத்தைக் குலைத்து, அதை நடுவிலிராதபடிக்கு எடுத்து, சிலுவையின்மேல் ஆணியடித்து;
ரோமர் 8:3 அதெப்படியெனில், மாம்சத்தினாலே பலவீனமாயிருந்த நியாயப்பிரமாணம் செய்யக்கூடாததை தேவனே செய்யும்படிக்கு, தம்முடைய குமாரனைப் பாவமாம்சத்தின் சாயலாகவும், பாவத்தைப் போக்கும் பலியாகவும் அனுப்பி, மாம்சத்திலே பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார்.  XXXX XXXX
**************************
விடுகதை
அழுதா  அது மட்டும்தான் கிடைக்கும்
சிரிச்சா  எல்லாமே கிடைக்கும்
சங்கீதம் 37:4 கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.  XXXXX
********************
விடுகதை
தோட்டத்துல வந்தது தொட்டத்தொடு போயிட்டு
மரத்துல வந்தது மரத்திலே போயிட்டு
ஏதேன் தோட்டத்துல வந்தது
கேச்தமனே தோட்டத்துல போய்விட்டது

ஆதியாகமம் 3 :  17. பின்பு அவர் ஆதாமை நோக்கி: நீ உன் மனைவியின் வார்த்தைக்குச் செவிகொடுத்து, புசிக்கவேண்டாம் என்று நான் உனக்கு விலக்கின விருட்சத்தின் கனியைப் புசித்தபடியினாலே, பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும்; நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் வருத்தத்தோடே அதின் பலனைப் புசிப்பாய். xxxxxxxxxxx
I பேதுரு 2:24 நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். I யோவான் 2:12 பிள்ளைகளே, அவருடைய நாமத்தினிமித்தம் உங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கிறதினால் உங்களுக்கு எழுதுகிறேன்.  XXXXXXX
****************************

விடுகதை
நெருப்பு இருந்தால் புகை இருக்கும்
புகை இருந்தால் நெருபிருக்கும்
நெருப்பில்லாமல் புகையாது  ஆனால்
இவர்கள் இல்லாமல் இருந்தால் சண்டை அடங்கும்.
கேள்வி எவர்கள் ??? 
விடை  நீதிமொழிகள் 26:20 விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.  xxxxxxxx
xxxxxxxxxxxxxxxxxxxx

விடுகதை:
பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்துபோகிறது, நாங்களும் பறந்துபோகிறோம்.
-அது என்ன?   விடை: ஆயுசு நாட்கள், சங் 90:9,10; ஐசுவரியம், நீதி 23:5.  XXXXXXX
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
விடுகதை:
துதியுங்கள். துதியுங்கள், தேவனை துதியுங்கள்
எக்காள தொனியோடும், வீணையோடும, சுரமண்டலத்தோடும்,
தம்புரோடும், யாழோடும் தீங்குழலோடும், கைத்தாளங்களோடும்
நடனத்தோடும்,.கர்த்தரைத் துதிக்க சொல்லும் கீதம்  எந்த சங்கீதம் ?
விடை:   150, சங்கீதம் 150:1-6. xxxxxxxxxxx
***********
விடுகதை
யாக்கோபு 4:6  பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
1 தாழ்மை 2 கிருபை  3 பெருமை
சேர்த்தே இருப்பது  தாழ்மையும் கிருபையும்
சேரக்கூடாதது  தாழ்மையும் பெருமையும்
பிரிந்தே இருப்பது கிருபையும் பெருமையும்
கேள்வி பிரிக்கமுடியாதது எது ???  தாழ்மையும் கிருபையும்  XXXXXXX
********************
விடுகதை
கைவீசம்மா கைவீசு
கஷ்டம் வரும்போது கைவீசு
வயது கூடினாலும் கைவீசு
வால வயதாகும் கைவீசு - வாசிப்பது எங்கே?
விடை:   சங்கீதம் 103:5 நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார்; கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது.  XXXXXXXXXXX 05-02-2016
************************************

விடுகதை:
சாத்தான் குனிய வைத்தான்
இயேசு நிமிர வைத்தார்
விடை லூக்கா 13:11 -12-13. அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.
12. இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே, உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி, 13. அவள்மேல் தமது கைகளை வைத்தார்; உடனே அவள் நிமிர்ந்து, தேவனை மகிமைப்படுத்தினாள்.
நீங்கள் ஆபிரகாமின் குமாரத்தியாகவும குமாரர்கள் ஆகவும் இருப்பதால்  உங்களை  இந்த ஓய்வுநாளில்  எசுதனே விடுவிப்பாராக  .XXXXXXXXXXXXXX 12-02-2016
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
விடுகதை:
கர்த்தரின் பெட்டிக்கு முன்னே கம்பீரமாய் நின்றதால்
கை இரண்டும் வுடைந்தது, தலை நிமிர நினைத்ததால்
தலை தானே உருண்டது , தலையில்லா உடலாய் 
தரையில்  உருண்ட தேவன் யார்  ??
விடைதாகோன் 1 சாமுவேல் 5:1-5.         XXXXXXXXXXXXXXXXXX  19-02-2016
xxxxxxxxxxxxxxxxxxxxx
விடுகதை:
எதிரும் புதிருமாய்
அணிகள் இரண்டு
எதிரில் தேவன்
புதிரில் யார்?
விடை: பெருமையுள்ளவன் – . I பேதுரு 5:5 அந்தப்படி, இளைஞரே, மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்குத் தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். யாக்கோபு 4:6         XXXX 26-02-2016
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
விடுகதை
கொடுமை என்று கூப்பிடுகிறேன், கேட்பார் ஒருவரும் இல்லை;
கூக்குரலிடுகிறேன்நியாய விசாரிக்க ஆளில்லை
என்னை நிந்தித்தீர்கள்
எனக்குக் கடினமுகம் காண்பிக்கிரீர்,
என் ஜனங்கள் விலகிப்போனார்கள்
என் தோல் அழுகிப்  போனாலும்  
என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.
என் மீட்பர் உயிரோடிருக்கிறார் 
கேள்வி  யார் சொல்கிறார்
விடை யோபு 19:26 அதிகாரம் 26. இந்த என் தோல் முதலானவை அழுகிப்போனபின்பு, நான் என் மாம்சத்தில் இருந்து தேவனைப் பார்ப்பேன்.XX 4-3-2016
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx
விடுகதை
ஆபேல் அள்ளி  கொடுத்தான், ஆபிரகாம்   விட்டு கொடுத்தான்
ஆனால் இவளோ தன்வறுமையிலிருந்து போட்டு விட்டாள்
கேள்வி தேவன் யாரை குறித்து சாட்சி கொடுக்கிறார் யார் ??
விடை லூக்கா 21:4 அவர்களெல்லாரும் தங்கள் பரிபூரணத்திலிருந்தெடுத்துத் தேவனுக்கென்று காணிக்கை போட்டார்கள்; இவளோ தன்வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டு விட்டாள் என்றார்.  XXXX  11-03-2016
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடுகதை

மூன்று விதமான அத்தாரிட்டி அதிகாரம் power of atorny 
1 பிள்ளைகள்
2 சிநேகிதன்
3 தேவனுடைய வீட்டார்
1 யோவான் 1: 12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்.
சிநேகிதன்
யோவான் 15:15 இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன்,
எபேசியர் 2:19 ஆகையால், நீங்கள் இனி அந்நியரும் பரதேசிகளுமாயிராமல், பரிசுத்தவான்களோடே ஒரே நகரத்தாரும் தேவனுடைய வீட்டாருமாயிருந்து  xxxxxxxx  18-03-2016
Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடுகதை
நீ பிள்ளை என்றால் அவர் தகப்பன்
நீ கிளை என்றால் அவர் செடி
நீ கப்பல் என்றால் அவர் நங்கூரம்
நீ மணவாட்டி என்றால் அவர் மணவாளன்
நீ ஆடு என்றால் அவர் மேய்ப்பன்
நீ கட்டிடம் என்றால் அவர் அஸ்திபாரம்
கேள்வி : அஸ்திபாரத்தை எங்கே போடவேண்டும்???
மத்தேயு 7:25 பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
அந்த கன்மலை கிருஸ்துவே I கொரிந்தியர் 10:4      xxxxxxxxxxxxxxxxxxx  18-03-2016
இனி உங்கள் பொறுப்பெல்லாம் அவரு கிட்ட கொடுத்திடுங்க
இனி நானல்ல அவரே, ஏசு சொல்றாரு  நானே வழி
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

விடுகதை
மூணு பேரு நிலைத்திருக்க
விசுவாசம் முந்தி இருக்க
நம்பிக்கை பிந்தி இருக்க
அன்பு  நிலைத்திருக்க
மூவரில் யார் பெரியவர்
விடை I கொரிந்தியர் 13:13 இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது. XXXX  08-04-2016
XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

விடுகதை
மணியடித்தால் சாப்பாடு
மறந்து போனால் கூப்பாடு
நன்பனின் பில்லை யானான்
நிலங்களை திரும்ப தந்தான்
-
அது யாருக்கு?

விடை: மேவிபோசேத் – 2 சாமு 9: 7. தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான்நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பக்கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்  .XXXXX  15-4-2016
.
***********************************
விடுகதை
ஆளுக்கு உலை வைப்பான்
காலுக்கு வலை விரிப்பான்
பார்த்துவிட்டால் சிரிப்பான்
நீதிமொழிகள் 29:5 பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்  XXX  29-4-2016

விடுகதை
உண்ணுகின்ற  உணவாக ஒரு  மனிதன்
உள்ளே சென்று குரட்டைவிட்டன்
வெளியே வந்து அறிக்கை இட்டான்
அவன் யார்?  விடை: யோனா. யோனா 1:17 யோனாவை விழுங்கும்படி ஒரு பெரிய மீனைக் கர்த்தர் ஆயத்தப்படுத்தியிருந்தார்; அந்த மீன் வயிற்றிலே யோனா இராப்பகல் மூன்றுநாள் இருந்தான்.  Xxx6-5-16 
******************************************

விடுகதை
விடாமல் விரட்டி  வரும்
தொடாமல் துரத்தி  வரும்
நீ நன்மை செய்யாதிருந்தால்
வாசற்படியில் படுத்திருக்கும் -அது எது?
விடை: பாவம். ஆதி 4:7 நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். XXXXXXXX
**************************************


விடுகதை
அவர் உனக்கு சமாதானத்தை கொடுத்தால்  யார் உன்னை கலங்கப்பண்ணுவான்???
அவர் உன்னை ஐசுவரியவான்  ஆக்கினால்  யார் உன்னை தரிதிரியமாக்க  கூடும்
அவர் உன்னை அதிகம்பெருக பண்ணினால் யார் உன்னை குருக பண்ண முடியும் - யோபு 30-34
அவர் உன்னை கன்மலையில் உயர்த்தினால்  யார் உன்னை விழ தள்ள முடியு
கேள்வி  சமைத்த மீனை பெருக வைத்தவருக்கு  சமுத்திர மீனை பெருக வைப்பது கடினமா ??
விடை ஆதி 1 - 22. தேவன் அவைகளை ஆசீர்வதித்து, நீங்கள் பலுகிப் பெருகி, சமுத்திர ஜலத்தை நிரப்புங்கள் XXXX 20-05-2016
*******************************

விடுகதை
உன் பலவீனத்தினின்று விடுதலை யானாய் இவளும் ஆபிரகாமின் குமாரத்தியா  இருக்கிறாளே
இனி அந்நியரயிராமல்தேவனுடைய வீட்டாருமா இருக்கிறீகள்
இனி பாவஞ்செய்யாதே -உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட
இனி பாவஞ்செய்யாதே நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை;

கேள்வி இயேசு அசுத்த ஆவியை இனி என்று சொல்லி எப்படி விரட்டுகிறார் ???
விடை மாற்கு 9:25 அப்பொழுது ஜனங்கள் கூட்டமாய் ஓடிவருகிறதை இயேசு கண்டு, அந்த அசுத்த ஆவியை நோக்கி: ஊமையும் செவிடுமான ஆவியே இவனை விட்டுப் புறப்பட்டுப்போ, இனி இவனுக்குள் போகாதே என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன் XXXXXXX  27-05-2016
*****************************************
 
விடுகதை
ஆபிரகாமினிமித்தம் தேவன் ஈசாக்கை  ஆசீர்வதித்தார்
யாக்கோபுனிமித்தம் தேவன் யோசேப்பை ஆசீர்வதித்தார்
யோசேப்பினிமித்தம் தேவன் எகிப்தை  ஆசீர்வதித்தார்
தாவீதினிமித்தம் தேவன்  சாலொமோனை ஆசீர்வதித்தார்

கேள்வி : தேவன் நம்மை எப்படி ஆசீர்வதித்து இருக்கிறார் ???
விடை எபேசியர் 1:3 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்.xxxxx
************************************
விடுகதை
ஒரு நாள் கேட்கணும்
ஆறு நாள் சொல்லணும்
அப்படி செய்யாவிட்டால்
வாழ்கையில் வெளிச்சமில்லை 
கேள்வி எதை கேட்கணும்  எதை சொல்லணும் ???
விடை  ஏசாயா 8:20 page 814 வேதத்தையும் சாட்சி ஆகமத்தையும் கவனிக்கவேண்டும்; இந்த வார்த்தையின்படியே சொல்லாவிட்டால், அவர்களுக்கு விடியற்காலத்து வெளிச்சமில்லை.xxx 10-06-2016

***************************************************

விடுகதை
உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்
மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
கேதுரு மரம் போல் வாலை நீட்டும்
வெண்கலம் போல் எலும்புகள் இருக்கும்
தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை
கேள்வி எந்த மிருகம்
விடை யோபு 40 - 15-24 இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்
******************************************************
விடுகதை
கேட்கிறதற்குத் தீவிரமாயும்,
பேசுகிறதற்குப் பொறுமையாயும்,
கோபிக்கிறதற்குத் தாமதமாயும் இருங்கள்

கேள்விஎது ??? தேவனுடைய எது நீதியை நடப்பிக்கமாட்டாது ??
விடை யாக்கோபு 1: 19-20  ஆகையால், என் பிரியமான சகோதரரே, யாவரும் கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கக்கடவர்கள்;
20. மனுஷருடைய கோபம் தேவனுடைய நீதியை நடப்பிக்கமாட்டாதே. 17-6-2016
****************************

விடுகதை
கற்பம் தரிக்கும்
பாவமாக மாறும்
முழுமை ஆனதும்
மரணத்தை உண்டாக்கும்  எது ????
விடை யாக்கோபு 1:15 பின்பு இச்சையானது கர்ப்பந்தரித்து, பாவத்தைப் பிறப்பிக்கும், பாவம் பூரணமாகும்போது, மரணத்தைப் பிறப்பிக்கும்.
*********************************************************

விடுகதை
மாமியார் உடைத்தால் மண் சட்டி
மருமகள் உடைத்தால் பொன் சட்டி
மருமகள் பிள்ளை பெற்றால் 
மாமியாருக்கும்  ஆசீர்வாதம்
விடை ரூத் 4:15 அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள். XXXXXXXXXX 24-6-2016
**************************************************

விடுகதை
நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே
இனி புது உடன்படிக்கை பண்ணுவேன்
அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை
அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை
அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை
அது இனி  விசாரிக்க படுவதுமில்லை
எதை குறித்து எரேமியா தீர்க்க தரிசனம் சொல்லுகிறார்

விடை - எரேமியா 3:16 நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார். XXXXXXXXXXXX  1-07-2016

உபாகமம் 12:20 உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சொன்னபடி, உன் எல்லையை விஸ்தாரமாக்கும்போது,
********************************************************

விடுகதை
அஸ்திபாரத்தைப் போட்டா மூத்த குமாரனை பலி கொடு
வாசல்களை வைத்தால்  இளைய குமாரனை பலி கொடு
எந்த பட்டணத்தை கட்டுகிற மனுஷன்  சபிக்கப்பட்டிருப்பான் 

விடை யோசுவா 6:26 அக்காலத்திலே யோசுவா: இந்த எரிகோ பட்டணத்தைக் கட்டும்படி எழும்பும் மனுஷன் கர்த்தருக்கு முன்பாகச் சபிக்கப்பட்டிருக்கக்கடவன்; அவன் அதின் அஸ்திபாரத்தைப் போடுகிறபோது தன் மூத்த குமாரனையும், அதின் வாசல்களை வைக்கிறபோது தன் இளைய குமாரனையும் சாகக் கொடுக்கக்கடவன் என்று சாபம் கூறினான். XXXXXXXXXXX 8-07-2016
**************************************

விடுகதை
அதை விரும்பினால்  அது அவனுக்கு வரும்
இதை விரும்பாமற்போனால்  அது  விலகிப்போம்
அது எது
விடை சங்கீதம் 109:17 சாபத்தை விரும்பினான், அது அவனுக்கு வரும்; அவன் ஆசீர்வாதத்தை விரும்பாமற்போனான், அது அவனுக்குத் தூரமாய் விலகிப்போம்.XXXXXXXXX  15-7-2016
*******************************

விடுகதை
சத்தியத்தில் நடத்துவார்
காரியங்களை அறிவிப்பார் 
எடுத்து எடுத்து கொடுப்பார் 
அவரையே மகிமை படுத்துவார்

கேள்வி அவர் யார்  ???
விடை யோவான் 16-13.,14 சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.
யோவான் 16:14 அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.
XXXXXXXXXXXXXXXXX  22-07-2016
*************************************************************

விடுகதை
இவனோடு தோழனானால்
அவன் வழியை கற்றுக்கொள்வாய்
அவன் வழியை கற்றுக்கொண்டால்
ஆத்துமாவுக்கு கண்ணி வைப்பாய் 
கையடித்து உடன் பட்டால்
கடனுக்கு  உடன் படுவாய்
செலுத்த ஒன்றுமில்லாதிருந்தால்
படுத்திருக்கும் படுக்கையையும்
அவன் எடுத்துக்கொள்ள வேண்டியதாகுமே
கேள்வி யாருக்கு ?
விடை நீதிமொழிகள் 22:24,25,26,27 கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
25. அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.
26. கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
27. செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே 29-7-2016
******************************************
விடுகதை

யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்?
யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்?
யாருக்குக் காயங்கள்?
யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?

விடை நீதிமொழிகள் 23-29,30. ஐயோ! யாருக்கு வேதனை? யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்?
30. மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே  05-08-2016
********************************************************
விடுகதை

ஈட்டி எட்டின வரை பாயும்
பணம் பாதாளம் வரை பாயும்
கேள்வி : தேவனுடைய வரத்தை பணத்தினால் வாங்க முடியுமா ??
விடைஅப்போஸ்தலர் 8:20 பேதுரு அவனை நோக்கி: தேவனுடைய வரத்தைப் பணத்தினாலே சம்பாதித்துக்கொள்ளலாமென்று நீ நினைத்தபடியால் உன் பணம் உன்னோடேகூட நாசமாய்ப் போகக்கடவது 12-08-2016
**************************************************** 
விடுகதை

தலை  உண்டு தலைவன் இல்லை
அறிவு உண்டு அதிகாரி இல்லை
கோடைகாலத்தில் சம்பாதிப்பான்
அறுப்புக்காலத்தில் சேர்த்து வைப்பான்

அவன் யார்  ?
விடைநீதிமொழிகள் 6:6,7,8 சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்
7. அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
8.
கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும் 26-8-2016
**************************************** 
விடுகதை

அவனை கடிந்துகொண்டாள் பகைப்பான் ,
இவனை கடிந்துகொண்டாள் நேசிப்பான்
கேள்வி யார் யார் ??
விடை நீதிமொழிகள் 9:8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்  2-9-16
*******************************
விடுகதை

வா என்று கூப்பிடு,
சத்தமிட்டு அழைத்திடு
வெள்ளியைப்போல் நாடிடு 
புதையலைப் போல தேடிடு
இவருக்கு பயந்திட்டால்
இவற்றை நீ  கண்டடைவாய்.

விடை நீதிமொழிகள் 2:3 ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து,

4. அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில்,

5. அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். 9-9-16
******************************
விடுகதை

1 உங்களுக்கு புகழ்ச்சி உண்டாகும் !
2 உங்களுக்கு கனம்  உண்டாகும் !
3 உங்களுக்கு மகிமை உண்டாகும் !
கேள்வி எப்பொழுது உண்டாகும்  ?

விடை I பேதுரு 1:7 அழிந்துபோகிற பொன் அக்கினியினாலே சோதிக்கப்படும்; அதைப்பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிற உங்கள் விசுவாசம் சோதிக்கப்பட்டு, இயேசுகிறிஸ்து வெளிப்படும்போது உங்களுக்குப் புகழ்ச்சியும் கனமும் மகிமையுமுண்டாகக் காணப்படும். 16-09-16
*************************************************
விடுகதை

அமைதியான விண்ணப்பம்
மனங்கசந்து  விண்ணப்பம்
தாழ்மையான விண்ணப்பம்
தனிமையான  விண்ணப்பம்
வேதனையான விண்ணப்பம்
உரிமையோடு விண்ணப்பம்
ஒப்புகொடுத்த விண்ணப்பம்
பொருத்தனை  விண்ணப்பம்
கேட்டுக்கொண்டாள் தேவ தேவனை
பெற்றுக்கொண்டால் பாலகனை
கேள்வி அவள் யார் ???
விடை அன்னால்  I சாமுவேல் 1-10           xxx 23-09-2016

****************************************  
விடுகதை

உங்களை பரிசுத்தராகவும்
உங்களை குற்றமற்றவர்களாகவும்
உங்களை கண்டிக்கப் படாதவர்களாகவும்
தேவன் முன் நிறுத்தும்படியாக உங்களை எதினாலே  ஒப்புரவாக்கினார் ??
விடை கொலோசெயர் 1:21 முன்னே அந்நியராயும் துர்க்கிரியைகளினால் மனதிலே சத்துருக்களாயுமிருந்த உங்களையும் பரிசுத்தராகவும் குற்றமற்றவர்களாகவும் கண்டிக்கப்படாதவர்களாகவும் தமக்கு முன் நிறுத்தும்படியாக அவருடைய மாம்ச சரீரத்தில் அடைந்த மரணத்தினாலே இப்பொழுது ஒப்புரவாக்கினார்.   30-9-16
******************************* 
விடுகதை
கிருபைக்குக் கீழ்ப்பட்டிருந்தால் பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.
கிருபையும் சத்தியமும் பாவத்தை மன்னிக்கும்
கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும்,
கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
கிருபையும் சத்தியமும்  பரலோகத்தின்  ஆதாரம்
கிருபையும் சத்தியமும்  உங்களை விடுதலையாக்கும்

கேள்வி  கிருபையும் சத்தியமும்  யார் மூலம் உண்டாயின ???

விடை யோவான் 1:17 எப்படியெனில் நியாயப்பிரமாணம் மோசேயின் மூலமாய்க் கொடுக்கப்பட்டது, கிருபையும் சத்தியமும் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் உண்டாயின.XXXXXX 07-10-2016
********************************* 

விடுகதை
எல்லோருக்கும் ரகசியம் உங்களுக்கு பரலோகராஜ்யத்தின் ரகசியம்
எல்லோருக்கும் தண்ணீர் உங்களுக்கு ஜீவத்தண்ணீர்
எல்லோருக்கும் கனி உங்களுக்கு ஜீவவிருட்சத்தின் கனியைப்    
எல்லோருக்கும் கோதுமை உங்களுக்கு உச்சிதமான கோதுமை
எல்லோருக்கும் தேன்  உங்களுக்கு கன்மலையின்  தேன்
எல்லோருக்கும் கூடாரம் உங்களுக்கு விசாலமான கூடாரம்
எல்லோருக்கும் பாதை  உங்களுக்கு ராஜபாதை
எல்லோருக்கும் மன்னா  உங்களுக்கு மறைவான மன்னா
கேள்வி யாருக்கு தருகிறார் ???
விடை வெளி 2:17 ஆவியானவர் சபைகளுக்குச் சொல்லுகிறதைக் காதுள்ளவன் கேட்கக்கடவன்; ஜெயங்கொள்ளுகிறவனுக்கு நான் மறைவான மன்னாவைப் புசிக்கக்கொடுத்து, அவனுக்கு வெண்மையான குறிக்கல்லையும், அந்தக் கல்லின்மேல் எழுதப்பட்டதும் அதைப் பெறுகிறவனேயன்றி வேறொருவனும் அறியக்கூடாததுமாகிய புதிய நாமத்தையும் கொடுப்பேன் என்றெழுது. XXXXXXXXXXXX 14-10-2016
******************************* 
விடுகதை

இளைப்பாறுதல் என்றால்  ஓய்வு
இளைப்பாறுதல் என்றால்  தஞ்சம்
இளைப்பாறுதல் என்றால்  பாதுகாப்பு
இளைப்பாறுதல் என்றால்  வசதி
இளைப்பாறுதல் என்றால்  அடைக்கலம்
இளைப்பாறுதல் என்றால்  அமைதி
இளைப்பாறுதல் என்றால்  சுகம் 
இளைப்பாறுதல் என்றால்  சமாதானம்
தஞ்சம் உண்டு ஓய்வு உண்டு ஓடு பாப்பா
வசதி உண்டு பாதுகாப்பு உண்டு பாடு பாப்பா
அமைதி உண்டு அடைக்கலம் உண்டு ஆடு பாப்பா
சுகம் உண்டு சந்தோசம் உண்டு பாடு பாப்பா
இவை எல்லாம் இளைப்பாறுதலில் உண்டு என்றால் 
கேள்வி யார் இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறார் ???  21-10-2016
விடை எபிரெயர் 4:3 விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத்தோற்றமுதல் முடிந்திருந்தும் இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன் என்றார்
********************************  
விடுகதை
கல்வியா, செல்வமா, வீரமா
கல்வி சாலமோனுக்கு ஞானத்தை தந்தார்
செல்வம் யோபுவுக்கு செல்வதை தந்தார்
வீரம் சிம்சோனுக்கு பலத்தை  தந்தார்
பரிசுத்தம் யோசேப்புக்கு பரிசுத்தத்தை தந்தார்

கேள்வி நமக்கு என்ன வாக்கு தத்தம் தந்தார் 28-10-2016

விடை யோவான் 3:16 தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். 28-10-2016
லூக்கா 10:19 இதோ, சர்ப்பங்களையும் தேள்களையும் மிதிக்கவும், சத்துருவினுடைய சகல வல்லமையையும் மேற்கொள்ளவும் உங்களுக்கு அதிகாரங் கொடுக்கிறேன்; ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது.

யோவான் 1:12 அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்

மத்தேயு 10:8 வியாதியுள்ளவர்களைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள். 28-10-2016
**********************************
விடுகதை

இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும்,
சாத்தானை விட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு
ஜெபத்தினால் பாவமன்னிப்பா  ?
உபவாசத்தினால் பாவமன்னிப்பா  ?
விசுவாசத்தினால் பாவமன்னிப்பா  ?
காணிக்கையினால் பாவமன்னிப்பா ?
பரிசுத்தத்தினால் பாவமன்னிப்பா ?
கேள்வி எதன் மூலம் பாவமன்னிப்பு ??
விடை அப்போஸ்தலர் 26:18 அவர்கள் என்னைப் பற்றும் விசுவாசத்தினாலே பாவமன்னிப்பையும் பரிசுத்தமாக்கப்பட்ட வர்களுக்குரிய சுதந்தரத்தையும் பெற்றுக்கொள்ளும்படியாக, அவர்கள் இருளைவிட்டு ஒளியினிடத்திற்கும், சாத்தானுடைய அதிகாரத்தைவிட்டு தேவனிடத்திற்கும் திரும்பும்படிக்கு நீ அவர்களுடைய கண்களைத் திறக்கும்பொருட்டு, இப்பொழுது உன்னை அவர்களிடத்திற்கு அனுப்புகிறேன் என்றார். 4-11-2016
****************
கிரியையினால் ரட்சிப்பா
ஜெபத்தினால் ரட்சிப்பா  ?
உபவாசத்தினால் ரட்சிப்பா  ?
காணிக்கையினால் ரட்சிப்பா ?
பரிசுத்தத்தினால் ரட்சிப்பா ?
கேள்வி தேவன் எதன் மூலம் நம்மை ரட்சித்தார் ?? 

விடை II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்

விடை தீத்து 3:5 நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார் 11-11-2016
******************************* 
விடுகதை
நீதிமான் கர்த்தரால் சிநேகிக்கப்படும்
நீதிமான் கிருபையால் தாங்கப்படும்
நீதிமான் ஜெபம் கேட்கப்படும்
நீதிமான் விரும்பியாவை  கொடுக்கப்படும்
நீதிமான் பாதையோ  ராஜ பாதை 
நீதிமான் சிங்கம்போல் தைரியமாவான்
நீதிமான் அப்பத்துக்கு  திரிவதில்லை.
நீதிமான் பனையைப்போல் செழிப்பாண் 
நீதிமான் கேதுருவைப்போல் வளருவான்
நீதிமான் துளிரைப்போலே தழைப்பார்கள்

கேள்வி : நீங்கள் எப்படி நீதிமான்களாக்கப்படுகிறீர்கள் ??
விடை : ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்

கலாத்தியர் 2:15 புறஜாதியாரில் பிறந்த பாவிகளாயிராமல், சுபாவத்தின்படி யூதராயிருக்கிற நாமும் இயேசுகிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலேயன்றி, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே மனுஷன் நீதிமானாக்கப்படுவதில்லையென்று அறிந்து, நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலல்ல,கிறிஸ்துவைப்பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்படும்படிக்குக் கிறிஸ்து இயேசுவின்மேல் விசுவாசிகளானோம்.
************************************
சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்
இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்
சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள்
எவர்களுடைய பாவங்கள் மூடப்பட்டதோ, அவர்கள் பாக்கியவான்கள்
கேள்வி யார் திரளான பாவங்களை மூடுபவன் ???
விடை : யாக்கோபு 5:20 தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்
************************************** 
விடுகதை

வேலைக்கு சம்பளம் கூலி உண்டு
பாவத்தின் சம்பளம் மரணமுண்டு
கிருபையின் வரத்தினால் என்ன உண்டு ???
விடை :நித்தியஜீவன் ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.
************************
விடுகதை
வெள்ளி தட்டில் ஒரு மாம்பழம்
தின்ன கொடுத்தால் தங்க மாம்பழம்
விடை நீதிமொழிகள் 25:11 ஏற்ற சமயத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமானம்
**********************************************
அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்
அவருடைய பாடுகலாலே இளைப்பாறுதல்
அவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பு
அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்
அவருடைய கிருபையால் மீட்ப்பு
அவருடைய கிரியையினாலே தேவராஜ்ம்
அவருடைய ஆவியினாலே வல்லமை
அவருடைய நாமத்தினாலே பிள்ளைகள்
கேள்வி அவருடைய பரிபூரணத்தினால் என்ன பெறுகிறீர்கள் ????

விடை யோவான் 1:16 அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
************************************************* 
மோசேயை செங்கடல் தடுக்க முடியவில்லை
எலிசாவை ஜோர்டான் தடுக்க முடியவில்லை
யோசுவாவை எரிகோ சுவர் தடுக்க முடியவில்லை
சவுலை வறுமை தடுக்க முடியவில்லை
தனியேலை சிங்கம் தடுக்க முடியவில்லை
தாவீதை கோலியத் தடுக்க முடியவில்லை
கேள்வி இயேசுவின் வசனத்தை தடுக்கமுடியுமா வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தை எப்படி முடிவு பெரும் ???
விடை : ஏசாயா 55:10-11 மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
11. அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்
************************************* 
விடுகதை
ஒரே தேவன் உண்டு
ஒரே கர்த்ர் உண்டு
ஒரே பிதாவும் உண்டு
ஒரே ஆவியானவர் உண்டு
ஒரே மந்தையும் உண்டு
ஒரே மேய்ப்பனும் உண்டு
ஒரே விசுவாசமும் உண்டு
ஒரே ஞானஸ்நானமும் உண்டு
ஒரே மனுஷனாலே பாவமும் உண்டு
ஒரே பலியினாலே ரட்சிப்பும் உண்டு 
கேள்வி நியாயப்பிரமாணம் எந்த ஒரே வரத்தையினாலே நிறைவேறுகிறது ??

விடை கலாத்தியர் 5:14 உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக, என்கிற இந்த ஒரே வார்த்தையிலே நியாயப்பிரமாணம் முழுவதும் நிறைவேறும்.
************************************************************ 
1 தேவன் 2. சாட்சி 3. திருத்துவம், பிதா குமாரன் பரிசுத்த ஆவி , ஆவி
4. 4 திசைகள்,  பூமி, காற்று 5. கிருபை 6. மனிதன், 6 அறிவு  6 ம்  நாளில் மனிதனை படைத்தார் 6 நாட்கள் வேலை நாள் 6 மணி நேரம் சிலுவையில் தொங்கினார்
7. பூரணம்  7த் டே  7 ம் நாள், ஓய்வு, நாள் நிறைவு நாள் 
8. புதிய ஆரம்பம் முதல் நாள், புது துவக்கம் , இயேசுவை  குறிக்கிறது
8 வது புத்தகம் ரூத் எட்டாம் நாளிலே யேசுவுக்குள் விருத்தசேதனம்
கேள்வி உலகம் அழிந்து நோவாபேழையில் இருந்து வெளி வந்தவர்கள் எதனை பேர் ???? 
விடை I பேதுரு 3:20 அந்த ஆவிகள், பூர்வத்திலே நோவா பேழையை ஆயத்தம்பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது, கீழ்ப்படியாமற் போனவைகள்; அந்தப் பேழையிலே சிலராகிய எட்டுப்பேர்மாத்திரம் பிரவேசித்து ஜலத்தினாலே காக்கப்பட்டார்கள்  8  அப்ப கையை தட்டு
**********************************************
விடுகதை
உங்களில் ஞானிகள் அநேகர்  இல்லை
ஞானிகளை வெட்கப்படுத்தும்படி உங்களை தெரிந்துகொண்டார்
உங்களில் பலவான்கள்  அநேகர்  இல்லை
பலவான்களை வெட்கப்படுத்தும்படி உங்களை தெரிந்துகொண்டார்
உங்களில் ஐசுவரியவான்கள் அநேகர்  இல்லை
அநேகரை ஐசுவரியவான்களாக்க உங்களை தெரிந்துகொண்டார்
கேள்வி உங்களை வெறுமையாக்குகிறவர்கள் உங்களை வெறுமையாக்கினால் உங்களுக்கு தேவன் என்ன செய்வார் ???
விடை ; நாகூம் 2:2 வெறுமையாக்குகிறவர்கள் அவர்களை வெறுமையாக்கி, அவர்களுடைய திராட்சக்கொடிகளைக் கெடுத்துப்போட்டாலும், கர்த்தர் யாக்கோபின் மகிமையைத் திரும்பிவரப்பண்ணுவது போல், இஸ்ரவேலின் மகிமையையும் திரும்பிவரப்பண்ணுவார்
****************************************************

விடுகதை  PART  II
உயரத்தை உரசிப் பார்த்தான்
அழகை அலசிப் பார்த்தான்
இஸ்ரவேலில் சிறந்து நின்றான்
பதவியைக் கண்டு ஒளிந்து கொண்டான் 
கேள்வி -அவன் யார்?
சரியான விடை:   சவுல். 1 சாமு 9:1; 10:22.  XX
************************** 
விடுகதை:
காய்க்காமல் பழுத்திடும்
கசக்காமல் இனித்திடும்
பலவண்ணப் பழங்களை
பலருக்கும் தந்திடும்
நித்திய வாழ்வை நீ அடைய
நித்தமும் இது தேவை  - கேள்வி  அது என்ன? 
சரியான விடை: : ஆவியின் கனிகள். - கலா 5:22,23.  XXX
***********************************************
விடுகதை
கூட்டிப் பார், கழித்துப் பார்
முட்டிப் பார் மோதிப் பார்
புத்தியிருந்தால் கணக்குப் பார்
முயன்று நீயும் தப்பிப் பார்  -அது என்ன? 
சரியான விடை:  666. - வெளி 13:18. 18. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.  XxxXX
=================================================
விடுகதை
திருதிருவென முழித்தான்
திருட்டுதனமாய் எடுத்தான்
மடமடவெனத் தோண்டினான்
மண்ணிற்குள் புதைத்தான்
கற்கள் பார்த்து சிரிக்க
கல்லால் எரிந்து கொல்லப்பட்டான்   -அவன் யார்?
சரியான விடை:  ஆகான். யோசு 7:16-26.  X

 ********************************
விடுகதை
உயிருக்கு பயந்து ஓடி
அடைக்கலப் பட்டணம் தேடி
உப்புத்தூணாய் மாறி
நின்ற பொண்ணு யாரு?
 சரியான விடை:  லோத்தின் மனைவி. ஆதி 19:12-26  X
விடுகதை
இரண்டெழுத்து பெண்
மூன்றெழுத்து ஆணை மணந்து
ஓபேதை பெற்றாள்   -அவள் யார்?
சரியான விடை:  ரூத். மத் 1:5.  XX
====================================
விடுகதை
ஆறடி தேக்கு மரம்
அரசம் பழம் பட்டு
தொப்பென்று விழுந்தது  -அது யார்?
சரியான விடை:  கோலியாத். 1 சாமு 17:4,49.  xx
**************************
விடுகதை
மறுபடியும் மறுபடியும் சொன்னாலும்
மனதுக்குள் இது வருவதில்லை.
மற்றக் கவலைகள் மலையாய் சேர
மறுபடியும் அது தேவைதானே  -அது என்ன?
பிலிப்பியர் 4 -4அதிகாரம்  சரியான விடை:   சந்தோஷம். பிலி 4:4.
***********************************
விடுகதை
ஓடும் நீரின் ஓரத்தில்
ஓங்கி உயர்ந்த நாணலில்
ஒளிந்து கிடந்தது முத்து சிப்பி
சிப்பிக்குள் இருந்தது ஒரு முத்து
அந்த முத்து யார்சரியான விடை:  மோசே. யாத் 2:1-10 X-2014  xxXX
**********************************
கேள்வி 4. செங்கடல் ரெண்டக  பிரிந்தது ஆனால்
யோர்தான் நதி  எத்தனை முறை இரண்டாக பிரிந்தது ?
1.
யோசு 4:7,19
2. 2
இரா 2:8
3. 2
இரா 2:13,14.  X feb 2015
**************************************

விடுகதை:
பிடித்தால் ஆடுவான்
வாசித்தால் அடங்குவான்
பாடினால் முறைப்பான்
உயிர்காத்த மருமகனின்
உயிரைப் பிடுங்க நினைத்தான் -அவன் யார்?
சரியான விடை:  சவுல் ராஜா. 1 சாமு 18:10,11.  XXX
***********************
விடுகதை
கேள்வி  யானைக்கு அடி சறுக்கும்
இவனுக்கோ முடி சறுக்கும்  -அவன் யார்?
 சரியான விடை:  : சிம்சோன். நியாய 16:16-21.  XXX
****************************
விடுகதை
ஊமை ஊரைக் கெடுக்கும்
பெருச்சாளி வீட்டைக் கெடுக்கும்
இவனோ மிகுந்த நன்மையைக் கெடுப்பான் -அவன் யார்?
பிரசங்கி  9 அதிகாரம்  9-18. யுத்த ஆயுதங்களைப்பார்க்கிலும் ஞானமே நலம்; பாவியான ஒருவன் மிகுந்த நன்மையைக் கெடுப்பான்  XXX
விடை: பாவியான ஒருவன். பிர 9:18. XXXX
*********************
விடுகதை
அரைக்கிற ஆலை தனில்
அடைப்பட்டுக் கிடப்பான்
ஆயுள் சக்கரத்தை
அரை நொடியில் எரிப்பான்
அடக்கினால் வாழ்வு    இல்லையெனில்அழிவு -அது என்ன?
சரியான விடை:   நாவு. – யாக் 3:5-10  XXXX
******************************************
விடுகதை
எங்கும் குறை
எதிலும் குறை
நிறைகளைத் தேடியே
நித்தமும் ஓடினாலும்
குறைவு ஏதும் இன்றியே
குதூகலமாய் வாழுவார் -அவர்கள் யார்?
சரியான விடை: : கர்த்தரைத் தேடுகிறவர்கள்சங் 34:10  XXXX
**************************************
விடுகதை
ஒன்றே ஒன்றை வாங்கி
உருட்டிப் புரட்டிப் பார்த்து
குழியைத் தோண்டி புதைத்து
வெளியே எடுத்துக் கொடுத்து
இருட்டு அறையில் விழுந்தான் -அவன் யார்?
சரியான விடை:   ஒரு தாலந்து வாங்கியவன்மத் 25:24-30. xxXXXX
**********************************
விடுகதை
கடன் அன்பை முறிக்கும் என்று
கடன் கொடுக்க தயங்கும் போது
கர்த்தருக்கே கடன் கொடுப்பான்
கனிவு நிறைந்த மனிதன் இவன் -அவன் யார்?
சரியான விடை:  ஏழைக்கு இரங்குகிறவன்நீதி 19:17.

**********************************  

விடுகதை
பூமியெல்லாம் காய
தோல்மட்டுமே நனைய
தோல் மட்டும் காய
பூமியெல்லாம் நனைய
வேண்டிக் கொண்டான் ஒருவன் -அவன் யார்?
சரியான விடை: : கிதியோன்நியா 6:36-40.  XXXX
********************************
விடுகதை
நஷ்டம் என்று விட்டு விட்டு
குப்பை என்று தூக்கிப் போட்டு
இயேசுவினால் பிடிக்கப்பட்டு
இலக்கை நோக்கி ஓடினார் -அவர் யார்?
சரியான விடை: : பவுல்பிலி 3:11-14.  XX
**********************************
விடுகதை
முன்னே உடல் ஓட
பின்னே தலை திரும்ப
மேலே ஆவி பறக்க
அங்கே தானே நிற்க - அவள் யார்?
சரியான விடை: : லோத்தின் மனைவிஆதி 19:26.
*******************************
விடுகதை
சுற்றி சுற்றி வந்து
சத்தம் போட்டு கத்தி
பொத்தென்று விழுந்ததால்
சொந்தமாக்கி கொண்டனர் -அது என்ன? யாருக்கு?
சரியான விடை: :எரிகோ கோட்டை, இஸ்ரவேலர்யோசு 6:1-21.
**************************
விடுகதை
தவளை தன் வாயால் கெடும்
தன் வாயால் கெட்டவன்
தலை கவிழ்ந்து நடந்தான்
தலை மேல் பிரச்சனை போக
தலை தொங்கி செத்தான் -அவன் யார்?
சரியான விடை: : ஆமான்எஸ்தர் 7:8-10. XXX
*********************************
விடுகதை
இவன் சொன்னால் வருவார்கள்
இவன் சொன்னால் போவார்கள்
உயிரிடம் சொன்னால் நடக்குமா?
உரவுக்காக ஓடினான்
உயிரைத் தர வேண்டினான் -அவன் யார்?
சரியான விடை: : நூற்றுக்கதிபதிமத் 8:5-10.
*******************************
விடுகதை
கர்த்தரின் சுதந்திரம்
கையினில் கிடைக்க
கண்ட மட்டும் கதறி அழுதாள்
தந்தால் உயிரோடு
இல்லையேல் மண்ணோடு
என சபதமிட்டாள் -அவள் யார்?
சரியான விடை: : ராகேல். ஆதி 30:1.
********************************
விடுகதை
பட்டாளத்து மனிதன்
பக்தியுள்ள மனிதன்
தேடி வந்த மனிதர்களின்
தேவைகளை சந்தித்தவன் - அவன் யார்?
சரியான விடை: : கொர்நெலியு - அப் 10:1,2.
******************************
விடுகதை
எண் கணித முறையில்
எண்ணற்ற பெயர்கள்
எப்படி மாற்றிப் பார்த்தாலும்
ஆண்டவர் பெயர் மாற்ற
புதிய பெயர் கிடைத்திடும் -அவை என்ன?
சரியான விடை: : எப்சிபாபியூலா. ஏசா 62:2-4.
*********************************
விடுகதை
சந்தைக்கு போன அண்ணன்
ஐம்பது பழம் கேட்டான்
ஒன்பதுக்கு ஐந்தை 45 பார்த்து
நால் 10 பத்தை தொட்டான்
ஆரஞ்சை எடுத்து 30
நாலு ஐந்தாய் பிருத்தான் 20
பத்து விலைபேசிமுடிந்தபின்பு போய்விட்டார்
-அவன் யார்?
சரியான விடை: : பிரகாம். ஆதி 18:23-33.  Xx 13-3-2015  XXXX
************************************
விடுகதை
நெறி தவறி நுழைந்ததால்
நெற்றியிலே பொட்டு - அது என்ன?
சரியான விடை:   உசியா. 2 நாளா 26:19.  XX
****************************
விடுகதை
ஆண்டவரின் ஆலயத்தை
அழ்குப்படுத்தி பார்ப்பான்
அடியேன் கேட்பதாய்
அமைதியாய் சொல்லுவான்
அனைவருக்கும் மாதிரியான
அன்பான நண்பன் அவன் -அவன் யார்?
சரியான விடை:  சாமுவேல். 1 சாமு 3-10.
*********************************
விடுகதை
பாம்புகளின் தலைவன்
பாலைவனத்தில் பிறந்தான்
பார்த்தவன் பிழைத்தான்
பாராதவன் மரித்தான் -அவன் பெயர் என்ன?
சரியான விடை: : நிகுஸ்தான். 2 இராஜா 18:4. XXX
*****************************
விடுகதை
ஐயா உள்ளே வந்தாரு
கொண்டு வந்ததைக் கொடுத்தாரு
கொஞ்சம் மறைச்சு வைச்சாரு
பொய் ஒன்றுதான் சொன்னாரு
பொட்டென்று விழுந்தாரு
அம்மா உள்ளே வந்தாங்க
அதே மாதிரி சொன்னாங்க
அந்தோ பாவம் அழிந்தாங்க -அவர்கள் யார்?
சரியான விடை:  அனனியாசப்பீராள். அப் 5:1-10. X  XXXXX
******************************
விடுகதை
அடிமேல் அடி அடித்தால்
அம்மியும் நகருமாம்ஆனால்
உலக்கையால் குத்தினாலும்
உரலிலே இருப்பானாம் - அவன் யார்?
சரியான விடை: : மூடன். நீதி 27:22. XXX
***********************************
விடுகதை
ஊசி முனையில் தவமிருந்தாலும்
ஊசிக் கண்ணில் வானம் தெரிந்தாலும்
ஊசிக் காதில் ஒட்டகம் போனாலும்
இவன் போக முடியாது பரலோகம் -அவன் யார்?
சரியான விடை: : ஐசுவரியவான்மத் 19:23,24.
*******************************
விடுகதை
தலைவர்களின் கூட்டத்தில்
தலையை ஆட்டி ஆடி
தலையை வாங்கிச் சென்றாள் -அவள் யார்?
சரியான விடை: : ஏரோதியாளின் குமாரத்தி மத் 14:6-11.   XXX
*****************************
விடுகதை
இந்தியா என்று சொல்லுங்கள்
தலை  நிமிர்ந்து நில்லுங்கள்
இதயத்தில் விசுவாசம் கொள்ளுங்கள்
இகத்தை இயெசுவுக்காய்  மாற்றுங்கள்
இந்தியா வேதத்தில்  எங்கே  ?  உள்ளது
சரியான விடை: : எஸ்தர் 1:1.  xxxxx
*****************************
விடுகதை
சின்னத்தம்பி, பெரியத்தம்பி
சிலையாய் மலைத்து நிற்க
துண்டக் காணோம் துணியைக் காணோம்
எதிரிகள் எல்லாம் ஓட
முப்பத்தொரு ராஜாக்களை
முறியவே அடித்தான் -அவன் யார்?
சரியான விடை: : யோசுவாயோசு 12:1-24.
************************
விடுகதை
அண்ணன் தம்பி இரண்டு பேர்
பிந்தியவன் ஏமாற்ற
முந்தியவன் ஏமாறுவான்
மூத்தவன் காட்டில் இருப்பான்
இளையவன் வீட்டில் இருப்பான் -அவர்கள் யார்?
சரியான விடை: : ஏசா, யாக்கோபுஆதி 27:1-37.
*****************************
விடுகதை
பிரதர் தினகரன் பாடினாரு
ஃபாதர் பெர்க்மான்ஸ் ஆடினாரு
நேச ரோஜா நகைக்க
இஸ்ரவேல் ராஜா பாடியே ஆடினாரு -அவர் யார்?
சரியான விடை: : தாவீது ராஜா – 2 சாமு 6:16.
*********************
விடுகதை
குருவி போல கூவி
புரவைப் போல புலம்பி
உயர உயரத் தேடி
கண்கள் பூத்து போயி
உயிரைத் திரும்ப பெற்றான் -அவன் யார்?
சரியான விடை: :எசேக்கியா ராஜாஏசா 38:9-16.
******************************
விடுகதை
தண்ணீருக்குள் ஏழு
தலை நிமிர்ந்தது வாழ்வு -அது யாருக்கு?
விடை:நாகமான் – 2இரா 5:1-14.  xxxxxxxxxx
********************************
விடுகதை
வேட்டையோ வேட்டை
கொள்ளை வேட்டை
கர்த்தருக்கு முன்பு கம்பீரமாய் நின்ற
பலத்த ஒரு வேட்டைக்காரன் -அவன் யார்?
விடை: நிம்ரோத்ஆதி 10:8,9
*******************************
விடுகதை
ஊசி முனையில் தவமிருந்தாலும்
ஊசிக் கண்ணில் வானம் தெரிந்தாலும்
ஊசிக் காதில் ஒட்டகம் போனாலும்
இவன் போக முடியாது பரலோகம் -அவன் யார்?
சரியான விடை: ஐசுவரியவான்மத் 19:23,24.
************************************
விடுகதை
ஊர் ஊராக சுற்றியவன்
ஊதாரியாக வாழ்ந்தவன்
சொந்தம் விட்டு பறந்தவன்
சொத்தை எல்லாம் அழித்தவன்
தவிட்டை தேடி தவித்தவன்
தகப்பனை நாடி நடந்தவன் -அவன் யார்?
சரியான விடை: :- இளைய மகன்லூக்கா 15:11-24.
***********************
விடுகதை
அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடாதே;
கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்.
அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு;
கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
 கொடுஆனால்- கொடுக்காதே -அது என்ன?யாருக்கு?
சரியான விடை: :- மறுஉத்தரவு, மூடனுக்குநீதி 26:4,5.
*********************************
விடுகதை
வருடத்தின் நாட்கள் போல
வருடங்கள் முழுவதும் நடநது
வரலாறு முடிவு இன்றி
வானில் பறந்து போனான் -அவன் யார்?
சரியான விடை: :- ஏனோக்குஆதி 5:21-24.
**************************
விடுகதை
அடர்ந்த மண் மேட்டிலே
அழுகுரல் ஒன்று கேட்குது
அம்மா எட்டி பார்க்குது
அருகே தண்ணீர் தெரியுது -அது எங்கே யார்?
சரியான விடை: :- பெயர்செபா வனாந்திரம்ஆதி 21:14-19.
*********************************** 

விடுகதை
வாழ ஆசைப்பட்டு
கண்ணீர் அதிகம் விட்டு
வாழ்நாள் அதிகம் கேட்டு
வாழ்ந்த மனிதன் யாரு?
சரியான விடை: :- எசேக்கியா ராஜா 2 இராஜா 20:1-6, ஏசா 38:1-5.
***********************************
விடுகதை
பளிச்சென வெளிச்சம்
திடீரென அடிக்க
பம்பரமாய் சுழன்று
படாரென்று விழுந்தான்
பவ்யமாய் எழுந்து பரிகாரம் தேட
பதில் ஒன்று கிடைக்க பரமனின் பணியினை
பக்தியுடன் தொடர்ந்தான் -அவன் யார்?
சரியான விடை: :-சவுல். அப் 9:1-6. XXXX
*********************
விடுகதை
அங்கும் இங்கும் ஆடுவான்
மேலும் கீழும் துள்ளுவான்
அசையாமல் நிற்கும்போது
கர்த்தருக்குள் வரவேற்பு
இல்லை என்றால்
கர்த்தருக்கு அருவருப்பு - அது என்ன?
சரியான விடை: :-கள்ளத்தராசு. நீதி 11:1.   X feb2015  XXXXXX
************************************
விடுகதை
கோக் வேண்டாம்,
பெப்சி வேண்டாம்
பூஸ்ட்வேண்டாம்
காம்ப்ளான் வேண்டாம்
ஓட ஓட களைப்பு இல்லை
நடக்க நடக்க சோர்வு இல்லை -அது யாருக்கு?
சரியான விடை: :கர்த்தருக்கு காத்திருப்பவர்கள் – ஏசா 40:31  சக்ஸ்   XXXXXX
******************************
விடுகதை:
வேர் விட்டு பரஷம்
விதை இன்றி வளரும்
வேதனை இதனால் பெருகும்
விசுவாசம் அதனால் சரியும் -அது என்ன?
சரியான விடை:  : பண ஆசை. 1 தீமோ 6:10  XXXX
********************
விடுகதை
மூன்று வருடங்கள் சுற்றி வந்ததார்
வருமானம் ஏதும் இல்லை என்று
வருடம் ஒன்றைக் கூட்டிக் கொடுத்து
வருவேன் என்று திரும்பி சென்றான் -அவன் யார்?
சரியான விடை: : தோட்டக்காரர்லூக் 13:6-9. xxxx
*******************
விடுகதை
மோசேயின் மனைவி பெயரின் முதல் எழுத்து
தானியேலின் இருப்பிடத்தில் இரண்டாம் எழுத்து
இயேசு சுகப்படுத்திய வியாதியின் கடை எழுத்து
இவைகளை இணைத்தால் என்ன  வரும் – XXX
அவை எவை?
சரியான விடை: :  சிலுவை வரும் சிப்போராள், யாத் 18:2, கொலுமண்டபம், தானி 2:49, நீர்கோவை, லூக்கா 14:2-4  XXX
*****************************
விடுகதை
குழாயடி சண்டையில்
குறுக்கிட மாட்டாள்
குடிக்க தண்ணீர் கேட்டால்
குடம் நிறையத் தருவாள்
குணசாலியான பொண்ணுக்கு
குபேர வாழ்வு அவள் யார்?
சரியான விடை: : ரெபெக்காள். ஆதி 24:16-67. XX
************************
விடுகதை
அம்மா உண்டு, அப்பா இல்லை
அண்ணன் தம்பி யாரும் இல்லை
அன்றொரு நாள் மரித்த அவன்
ஆண்டவர் இயேசுவால் உயிர் பெற்றான் -அவன் யார்?
சரியான விடை:   நாயினூர் விதவையின் மகன்லூக் 7:11-15  XXX
**********************************
விடுகதை
சூது வாது அற்றவன்
சூப்பராக வாழ்ந்தவன்
இயேசுவைத் தேடி வந்தவன்
இயேசுவால் சாட்சி பெற்றவன் -அவன் யார்?
சரியான விடை:   நாத்தான்வேல்யோவா 1:45-50
*********************************
விடுகதை
கடன் அன்பை முறிக்கும் என்று
கடன் கொடுக்க தயங்கும் போது
கர்த்தருக்கே கடன் கொடுப்பான்
கனிவு நிறைந்த மனிதன் இவன் -அவன் யார்?
சரியான விடை: : ஏழைக்கு இரங்குகிறவன்நீதி 19:17.
******************************

விடுகதை
ஆட்டின் பின்னே நடந்தவன்
ஆண்டவரின் பணியை செய்தான்
மீனைப் பிடிக்க சென்றவன்
மீட்பரின் பணியைச் செய்தான்ஆனால்
மாட்டின் பின்னே நடந்தவன்
மாட்டிக் கொண்டான் ஆண்டவரின் பணிக்கு -அவன் யார்?
சரியான விடை:   எலிசா – 1 இரா 19:15-21.  xxXX
***************************
விடுகதை:
வெட்டி வேலை ஆபிஸரு
பட்டி தொட்டி சுத்தினாரு
சட்டிப் பானையை உருட்டினாரு
பட்டினியால் உருண்டாரு -அவர் யார்?
மனந்திரும்பினாறு
மேல தாள சாப்பாடு
சரியான விடை:  : இளையகுமாரன்லூக்கா 15:13-  XXX
********************************
விடுகதை
குள்ளமான மனிதனுக்கு
குதித்து வந்ததாம் ஆசை
குடுகுடுவென மரத்தில் ஏறி
கூட்டத்திலே இயேசுவைப் பார்த்தானாம்
உள்ளத்தில் அவரை ஏற்றுக் கொண்டு
இல்லத்தில் விருந்து கொடுத்தானாம் -அவன் யார்?
சரியான விடை:: சகேயுலூக்கா 19:1-10.
**************************
விடுகதை
அப்பா ஊரு கிரேக்கம்
அம்மா ஊரு யூதேயா
பாட்டி ஊட்டி வளர்க்க
பவுல் அண்ணன் அழைக்க
பரமனின் பணியைத் தொடர்ந்தார் -அவர் யார்?
சரியான விடை: தீமோத்தேயுஅப் 16:1-3.
*****************************
விடுகதை
சின்னத்தம்பி, பெரியத்தம்பி
சிலையாய் மலைத்து நிற்க
துண்டக் காணோம் துணியைக் காணோம்
எதிரிகள் எல்லாம் ஓட
முப்பத்தொரு ராஜாக்களை
முறியவே அடித்தான் -அவன் யார்?
சரியான விடை:   யோசுவாயோசு 12:1-24.
*************************************
விடுகதை:
ஆசீர்வாத பிரசங்கம்
ஆவியில் நிறைந்த பிரசங்கம்
ஆளுக்கொரு பிரசங்கம்
எத்தனை பிரசங்கம் கேட்டாலும்
இதனை அறிக்கை பண்ணாவிட்டால்
எதனையும் நம்பக் கூடாதாம் -எதனை?
சரியான விடை: இயேசு தேவனுடைய குமாரன் – 1 யோவா 4-3   XX

*****************************************
விடுகதை
முதலாவது சிருஷ்டிக்கப்பட்ட மனிதன்ஆதாம்”.  - ஆதி 2:19
முதலாவது பிறந்த மனிதன்காயீன்”. – ஆதி 4:1.
முதலாவது கப்பல் கட்டியவன்நோவா”. – ஆதி 6:14-22.
முதலாவது எழுதப்பட்டுள்ள பறவைகாகம்”. – ஆதி 8:7.
முதலாவது தசமபாகம் கொடுத்தவன்ஆபிரகாம்”. – ஆதி 14:18-20, எபி 7:1-4.
முதலாவது  தீர்க்கதரிசிஏனோக்ஆகும். – யூதா 14,15.
முதலாவதுஅல்லேலூயாஎன்ற வார்த்தை சங் 104:35-ல் வருகிறது.
முதலாவது இயேசு செய்த அற்புதம் கானா ஊர் கலியாண வீட்டில்  – யோவா 2:1-11.
உயிர்த்தெழுந்த இயேசுவை முதலாவது பார்த்ததுமகதலேனா மரியாளே”. – மாற் 16:9,10.
கேள்வி இயேசு சிலுவையில் பேசின முதலாவது வார்த்தைபிதாவே இவர்களுக்கு மன்னியும்”  சரியான விடை:   லூக் 23:24.XX
*****************************

விடுகதை
சோதனையில   மாட்டிடுவான்,
கண்ணியில சிக்கிடுவான்
கேட்டினிலே அமிழ்திடுவான்
சேதம் பல வந்தாலும் 
இச்சையில விழுந்திடுவான்
சரியான விடை:   I தீமோத்தேயு  6 :9  XXXX
9. ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகிறார்கள். XXXX
*****************************
விடுகதை
பழிவாங்குதல் எனக்குரியது
யுத்தம் செய்ய வருபவனை முத்தம் செய்ய வைபவராம் நம் ஆண்டவர்
இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்;
என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான்;
என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான்
என்று சொல்லி; என் சகோதரனாகிய  கொன்றுபோடுவேன் என்று  சொல்லிக் கொண்டான்
கேள்வி யர்ர் அவர் ????   
சரியான விடை: ஆதியாகமம் 33:4 அப்பொழுது ஏசா எதிர்கொண்டு ஓடிவந்து, அவனைத் தழுவி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்; இருவரும் அழுதார்கள்.
யாக்கோபின்  ஆசீர்வாதம் உங்களுக்கும் வருவதாக
யுத்தம்  செய்ய  வந்தவன் முத்தம் செய்தான் XX
யுத்தம் செய்ய வருபவனை முத்தம் செய்ய வைபவராம் நம் ஆண்டவர் XXXXXXXXX
*******************************************
KANI KODAVITTAL VETTAPADUVATHU OLD TESTMENT
KANI KODUKKA VAIPEN ENPATHU NEW TESTMENT
விடுகதை
அவர் என்னை ஒப்பிட்டுச் சொன்ன கொடி நான்..
அனைவரும் விரும்பும் கனி நான்
குலை குலையாய் காய்திடுவேன்
பசி ஆற தந்திடுவேன்
அவரில் நான் நிலைபதினால் 
கேட்பதெல்லாம் கொடுத்திடுவார்
யார் அவர்  சரியான விடை:  யோவான் 15 : 1.
நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.  XX21-08-2015
*******************
விடுகதை:
இதில் குறையிருந்தால் கேட்டிடலாம்
சம்பூரணமாய்க் கொடுத்திடுவார்
ஒருவரையும் கடிந்துகொள்ளர்
சம்பாதிக்க முடியாததை
சர்வல்லவர் தந்திடுவார் -அது என்ன?
விடை: ஞானம். யாக் 1:5. . உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.  Xxx  25-09-2015 XX

**********************************
விடுகதை:
விலையுயர்ந்த முத்து
வீட்டுக்கு வெளிச்சம்
அணையா விளக்கு
குறையாத சம்பத்து
தயையுள்ள போதகம்
சந்ததிக்கு ஆசீர்வாதம்
ஏகப்பட்டது  இருக்கு
கண்டிபிடிப்பதில் கடினம்
கண்டுபிடித்தால் இன்பம் அவள்  -அவள் யார்? Working, White, Wisdom
விடை: நீதிமொழிகள் 31:10  குணசாலியான ஸ்தீர். நீதி 31:1-31.
நீதிமொழிகள் 31:10 குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.XXXXXXX
**************************
விடுகதை:
22,000
பேர் திரும்பி போக
10,000
பேர் மீதியாக இருக்க
300  
பேரைக்கொண்டு
மீதியானியரை முறிய அடித்தான் -அவன் யார்?
விடை: கிதியோன்நியாய 7:3-7         XX28-08-2015

****************************

விடுகதை
1 ஞானமோ சுத்தமுள்ளதா இருக்கும்
2 பின்பு சமாதானமும் இருக்கும்
3சாந்தம் உள்ளதா இருக்கும்
4இணக்கமுமுள்ளதாயும்,இருக்கும் 
5இரக்கத்தாலும் இருக்கும் 
6 நற்கனிகளாலும் இருக்கும்  
7பட்சபாதமில்லாததாயும், இருக்கும்
8மாயமற்றதாயுமிருக்கிறது.
ஆனால் இவை  எல்லாம் எங்கிருந்து  வருகிறது
விடை யாக்கோபு 3:17 பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.  XXX
*******************************************
விடுகதை
புகழ் வந்தால் ஓடி வரும்
பணம் வந்தால் பறந்து வரும்
விழித்திருந்தால் தப்பிடுவார்
சகித்திருந்தால் ஜெயித்திடுவார்  
ஜீவகிரீடத்தைப் பெற்றிடுவார்  -அது என்ன?
Ans:- சோதனையாக் 1:12. XXXXXXXXXXX
**************************
விடுகதை:
தெளிந்த புத்தி இல்லாவிட்டால்
சிந்தைக்குள் நுழைந்திடுவான்  
விழித்து  இருக்கா விட்டால்
சிங்கம்போல்  விழுங்கிடுவான்   
இப்படி வகைதேடிச் அலைபவன்  யார்ர் ??
விடை: பிசாசு - 1 பேதுரு 5:8.  XXX      

****************************

யார் நம்பவில்லை?????
பழத்தை திண்றால்🍒 *மரணம் நேரிடும் என்றபோது மனிதன் நம்பவில்லை*⚰👱🏼👩🏼

ஜலப்பிரளயம் வரப்போகிறது 🌊 *பேழைக்குள் வந்துவிடுங்கள் என்று நோவா கதறியபோது மனிதன் நம்பவில்லை*🚢👴🏾

பட்டணம் அழியப்போகிறது 🌇🔥🔥 *திரும்பிப்பாா்காதே என்ற போது லோத்தின்மனைவி நம்பவில்லை*👱🏼‍♀

தலைப்பிள்ளை சங்காரம் வருகிறது👨‍👨‍👦 *என் ஜனங்களை விட்டுவிடு என்று மோசே கெஞ்சியபோது பார்வோன் நம்பவில்லை*⚠👳🏼

கானானியர்களை வெல்ல🥗🍇 *நம்முடன் ஆண்டவர் இருக்கிறார் என்று காலேப்சென்ன போது ஜனங்கள் நம்பவில்லை*👬

மேசியா *பிறந்துவிட்டார் என்றபோது👶🏼 ஜனங்கள் அதை நம்பவில்லை*✝

அவர் மீண்டும் 🌠 *வருவார்

பூமியிலுள்ளயாவருடைய கண்களும் நிச்சயம் அவரைக்காணும்.

*அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுங்கள்.*



THANK YOU FOR ALL

BY

SELVAN

TAMILNADU INDIA



ANOTHER LINK CLICK HERE


selvanbible.blogspot.com/



அனுதின மன்னா இங்கே கிளிக் செய்யவும்
http://www.tamil-bible.com/

http://www.tamil-bible.com/tabletype.php?Type=TML

No comments:

Post a Comment